பாஜக தலைவர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் பம்பரமாக சுற்றிச் சுழன்று வருகின்றன. வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவரது சொத்து விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த வேட்புமனு தாக்கல் மூலம் அமித் ஷாவின் சொத்துக்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 38.81 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.
அமித் ஷா சொத்து விவரம்:
ஆண்டு சொத்து மதிப்பு
2012 11.79 கோடி
2017 34.31 கோடி
2019 38.81 கோடி
இந்தச் சொத்து மதிப்பு இவர் 2012 ஆம் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பைவிட ஏழு மடங்கு உயர்ந்ததாகும். 2012 ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் இவரது மொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பே 11.79 கோடி ரூபாய் ஆக இருந்தது.
அதன் பிறகு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா தனது சொத்து மதிப்பாக 34.31 கோடி ரூபாய் எனத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி பார்த்தால் அவரின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 4.5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அமித் ஷா நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மற்றும் அவரது மனைவியின் வருமானம் மொத்தமாக 2.84 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது வருமானமாக மாநிலங்களவை எம்பி சம்பளம், சொத்துகளின் மீது வரும் வாடகை மற்றும் விவசாய நிலத்திலிருந்து வரும் தொகை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்