[X] Close

“பேட்டிங்கில் எந்த பிளானும் இல்லை” - பார்திவ் படேல்

We-do-not-have-a-fixed-plan-for-batting---Parthiv-Patel

இன்றைய போட்டியில் பெங்களூரு பேட்டிங்கிற்கு என எந்தத் திட்டமும் செய்யவில்லை என அந்த அணியின் கீப்பர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.


Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே இன்று 11வது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. அந்த அணியில் புதிதாக முகமது நபி என்ற ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement

இந்தப் போட்டி தொடர்பாக பேசியுள்ள பெங்களூர் அணியின் கீப்பர் பார்திவ் படேல், “இரண்டு போட்டிகள் மட்டும் தான் முடிந்துள்ளது. எங்கள் அணியின் ஓபனிங் பேட்டிங் தொடர்பாக எங்கள் எண்ணத்தில் எந்தத் திட்டமும் இல்லை. நாங்கள் அணியில் விக்கெட் விழுவதை பொறுத்தே பேட்டிங் வரிசையை தீர்மானிக்கிறோம். முதலில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்கள் களமிறங்குவது நன்றாக இருக்கிறது. அதேசமயம் தொடக்கத்தில் இரண்டு பேரும் இடது பேட்ஸ்மேன்களாக இருந்தால், அணிக்கு சிறிய பலம்தான். ஆனால் மொத்தத்தில் இன்றைய போட்டியில் நாங்கள் எந்தத் திட்டத்திலும் இல்லை” என்றார்.     


Advertisement

Advertisement
[X] Close