Published : 24,Apr 2017 10:17 AM

புனே- மும்பை மோதல்: தொடருமா தோனியின் அதிரடி?

IPL-2017-Pune-Mumbai-clash

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, நடப்புத் தொடரில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக வலம் வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணி, ஹாட்ரிக் வெற்றிக்கான முனைப்புடன் களம் காண்கிறது. மகேந்திர சிங் தோனி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி இருப்பது புனே அணிக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியுடன் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 3 ஆட்டங்களில், புனே அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்