Published : 24,Apr 2017 02:48 AM
ஜான்டி ரோட்ஸ் மகளுக்கு மோடி வாழ்த்து

தென்னாப்ரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்ட்டி ரோட்சின் மகளின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோட்சின் மகளான இந்தியா, இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, ரோட்சின் மகள் இந்தியாவுக்கு, இந்தியாவில் இருந்து பிறந்து நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மை கவர்ந்ததால், தனது மகளுக்கு இந்தியா என்று பெயரிட்டதாக ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்திருந்தார்.