Published : 23,Apr 2017 01:11 PM

கருணையுடன் பரிசீலியுங்கள்: விவசாயிகளுக்காக பேசிய முதலமைச்சர் பழனிசாமி

TN-CM-speech-for-farmers

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், உழவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதே நாட்டின் முக்கியமான பொருளாதார யுக்தியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அளவீடு என்ற பாதையில் மத்திய அரசு பயணிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகள் கூட்டாட்சி பண்புகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு முறை கொண்டு வந்தது மூலம் மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டிருப்பதாகவும் இதனால் தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அதிருப்தி தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் மசோதா நிறைவேற மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்