[X] Close

செய்தியாளர்களை ‘நீ, வா, போ’ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

Premalatha-Vijayakanth-press-meet

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


Advertisement

சென்னையில் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது. தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Advertisement

திமுக என்றாலே தில்லு முல்லு கட்சிதான். துரைமுருகன், திமுகவின் கட்சித் தலைமை பற்றி  சுதீஷிடம் என்ன சொன்னார் என்பதை அவர் முதலில் தெரிவிக்கட்டும். தற்போது வயது மூப்பு காரணமாக துரைமுருகன் உளறிக் கொண்டிருக்கிறார். நானும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள்தான். ஆனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் இவ்வளவு மோசமாக அரசியல் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை.தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.

எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவரே கருணாநிதிதான். அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்திக்க முதல்முறையாக அனுமதி கேட்டதே விஜயகாந்த்தான். ஆனால் ஸ்டாலின் அதற்கு கடைசி வரை அனுமதி தரவில்லை. ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்தை பார்த்து சென்ற உடனேயே, ஸ்டாலினிடம் இருந்து விஜயகாந்த்தை சந்திக்க வருவதாக அழைப்பு வந்தது. நாங்களும் ஏற்றுக்கொண்டோம். எது நாகரிகம், எது அநாகரிகம் என்பதை துரைமுருகன் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.


Advertisement

வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வர்; தேர்தலும் அதுபோலதான். தேமுதிகவின் கூட்டணிக்காக பலபேர் தொடர்பு கொண்டனர். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. ராணுவக் கட்டுக்கோப்புடன் செயல்படும் கட்சி தேமுதிக. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிகவிற்கு எந்தப் பயமும் இல்லை. ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள். ஆறப்பொறுங்கள். இரண்டு நாளில் அதிகாரப்பூர்வமாக முடிவு அறிக்கப்படும்.” என்றார்.

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில், மரியாதை குறைவாக நீ, வா, போ எனச் செய்தியாளர்களை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close