[X] Close

விஜயகாந்தை சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

M-K-Stalin-meets-Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.


Advertisement

வர இருக்கிற தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப் படும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

இதற்கிடையே திடீர் திருப்பமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையில், யாரும் எதிர்பார்க்காத இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Tags : VijayakanthM.K.Stalin

Advertisement

Advertisement
[X] Close