[X] Close

“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு

-PM-Learnt-About-Pulwama-Attack--Continued-To-Shoot-For-Film---Congress

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் செய்தி தெரிந்த பின்னரும், பிரதமர் மோடி விளம்பர படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலுக்கு எல்லா கட்சியினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சி, ராணுவம் மற்றும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவித்தது. 

       


Advertisement

இந்நிலையில், தாக்குதல் நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை முன் வைத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, “பயங்கரவாதிகளின் தாக்குதல் மதியம் 3.10 மணியளவில் நடைபெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாலை 6.40 மணி வரை விளம்பர படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். ராணுவ வீரர்கள் உயிரிழந்ததில் நாடே சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், பிரதமர் படப்பிடிப்பில் மூழ்கியிருந்திருக்கிறார். உலகில் எந்தப் பிரதமராவது இதுபோல் இருப்பாரா?” என்று சுர்ஜிவாலா கூறினார். 

மேலும், “படப்பிடிப்பு முடிந்து கட்சித் தொண்டர்கள் ஆரவாரங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஏரியில் படகு பய‌ணம் மேற்கொண்டார்.  தேசபக்தர் எனக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, இதன் மூலம் ராஜ தர்மத்திலிருந்து நழுவி விட்டார்” என்றும் சுர்ஜிவாலா குற்றஞ்சாட்டினார்.

            

இதனையடுத்து, புல்வாமா தாக்குதலை வைத்து காங்கிரஸ் கட்சி தரக்குறைவான அரசியல் செய்வதாக பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பில் பிரதமர் மோடி முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எவ்வித சமரசமும் செய்யமாட்டார் என்றும் அவர் கூறினார். பிரத‌மர் மோடி ஒரு நாளில் 18 மணி நேரம் நாட்டுக்காக உழைப்பதாகவும், அவரது தேசப்பற்றை மக்கள் சந்தேகிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close