[X] Close

சவுதி இளவரசரை மரபை மீறி வரவேற்ற மோடி

PM-Modi-welcomed-Saudi-Prince-Salman-in-violation-of-traditions

ஆசிய கண்டத்தில் அரசு முறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை மீறி பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.


Advertisement

சவுதி இளவரசர் பாகிஸ்தான் சென்றடைந்ததை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்‌தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, சவுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளது.

Image result for mohammed bin salman


Advertisement

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக பாகிஸ்தான் சென்ற சல்மானுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொட‌ர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாகிஸ்தான், சவுதி இடையே சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் பாகிஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுரங்கத் தொழில்களில் முதலீடு செய்வது என பல்வேறு பணிகளில் சவுதி கவனம் செலுத்தவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பின், சவுதி இளவரசர் சல்மான், நேற்று இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் பாகிஸ்தான் பயணத்தை முடிவிட்டு நேரடியாக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி மறுத்தது. இதனால் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி சென்று அதன் பின் நேற்று‌ இரவு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா வந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், ராணுவத்துறையில் முக்கியமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு என தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close