[X] Close

“கிட்டதட்ட எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இல்லை” - அரவிந்த் கெஜ்ரிவால் 

AAP-Believes-Congress-Has--Nearly-Said-No--to-an-Alliance-in-Delhi

டெல்லியில் ஆம் ஆத்மி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட வெளியேறிவிட்டதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகள் பல்வேறு தருணங்களில் ஒன்றுகூடி வருகிறார்கள். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடக்கும் கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்கள். 

             


Advertisement

இந்த எதிர்க்கட்சிகள் முகாமில் தொடக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. சமீப காலமாகதான் அவரும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆத் ஆத்மி கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. நேற்று கூட ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி, சரத் பவார், சரத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

                

இதனிடையே, 16வது மக்களவையின் கடைசி நாளான நேற்று அவை முடிந்த பின்னர், டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் 6 முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், ஃப்ரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Advertisement

இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட வெளியேறிவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் பாஜகவுக்கு எதிராக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகவே முடியும். இதே நிலைதான் உத்தரப் பிரதேசத்திலும் உள்ளது. 

நாட்டின் நலன் குறித்து நாங்கள் (காங் - ஆம் ஆத்மி) கவலைப்படுகிறோம். ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் கிட்டதட்ட கூறிவிட்டது” என்றார்.

           

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தக் கருத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே சலசலப்பு இருப்பதையே காட்டுகிறது. அதோடு, ஆம் ஆத்மி சார்பில் நேற்று நாடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close