[X] Close

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்

P-Chidambaram-Appears-Before-Enforcement-Directorate-in-INX-Media-Case

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.


Advertisement

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றன. 

அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரான நிலையில், ப.சிதம்பரம் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close