தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு, ஏற்கனவே அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். முன்பு வெளியிட்ட காலிப்பணியிடங்களை விட, தற்போது 181 காலிப்பணியிடங்களாக டிஎன்பிஎஸ்சி உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இன்றே கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்க மறவாதீர்கள்.
1) பணி:
துணை ஆட்சியர்
துணை காவல் கண்காணிப்பாளர்
உதவி ஆணையர் (வணிக வரித்துறை - C.T)
கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர்
மாவட்ட பதிவாளர்
கிராமபுற மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர்
மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரி
தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி
2) விண்ணப்பிப்பதற்கான தேதி விவரங்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள் - 03.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.01.2019
முதல் நிலை தேர்வுக் கட்டணம் வங்கி மூலமாகவோ அல்லது தபால் வழியாகவோ செலுத்த கடைசி நாள் - 02.02.2019
முதல் நிலை தேர்வு நடைபெறுவதற்கான தேதி மற்றும் நேரம்: 03.03.2019 - காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாக தகவல்
3) காலிப்பணியிடங்கள்:
துணை ஆட்சியர் - 27
துணை காவல் கண்காணிப்பாளர் - 90
உதவி ஆணையர் (வணிக வரித்துறை - C.T) - 18
கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - 13
மாவட்ட பதிவாளர் - 07
கிராமப்புற மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் - 15
மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரி - 08
தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - 03
மொத்தம் = 181 காலிப்பணியிடங்கள்
4) தேர்வுக் கட்டண விவரம்:
நிரந்தரப் பதிவில் பதிவு செய்யாதவர்களுக்கான கட்டணம்:
நிரந்தரப் பதிவில் பதிவு செய்ய கட்டணம் = 150 ரூபாய்
முதல் நிலை தேர்வுக்கான கட்டணம் = 100 ரூபாய்
முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் = 200 ரூபாய்
மொத்தம் = 450 ரூபாய்
நிரந்தரப் பதிவில் பதிவு செய்தவர்கள்:
முதல் நிலை தேர்வுக்கான கட்டணம் = 100 ரூபாய்
முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் = 200 ரூபாய்
5) முதல் நிலை தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலமாகவோ, தபால்நிலையத்திலோ மற்றும் வங்கிகளிலோ விண்ணப்பித்த தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
6) வயது வரம்பு: (01.07.2019 க்குள்)
உதவி ஆணையர் தவிர மற்ற பணிக்கான வயது - 21 முதல் 37 வரை (01.07.2019 க்குள்) இருக்க வேண்டும்.
உதவி ஆணையர் பணிக்கான வயது - 21 முதல் 37 அல்லது 38 வரை (01.07.2019 க்குள்) இருக்க வேண்டும்.
7) கல்வித்தகுதி:
துணை காவல் கண்காணிப்பாளர் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருத்தல் அவசியம். கூடுதலாக உடற்திறனுக்கான தேசிய விருது
பெற்றவராக இருந்தால் சிறப்பு.
உதவி ஆணையர் (வணிக வரித்துறை - C.T) என்ற பணிக்கு, வர்த்தகம் மற்றும் சட்டம் பயின்று அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் என்ற பணிக்கு, M.A / M. Com / B.A என்ற பட்டம் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரி என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொருளியல் / கல்வி / சமூகவியல் / புள்ளியியல் அல்லது உளவியல் போன்ற துறைகளில்
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருத்தல் அவசியம்.
கிராமப்புற மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் என்ற பணிக்கு, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
8) உடற்தகுதி:
துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி பணிகளுக்கு உடற்தகுதி மிக அவசியமாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு ஆண்களுக்கு உயரம் 165 செ.மீ-க்கு குறையாமலும் மற்றும் மார்பளவு 86 செ.மீ விரியும் திறன் 5 செ.மீக்கு குறையாமலும், பெண்களுக்கு
உயரம் 155 செ.மீ-க்கு அதிகமாகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி பணிக்கு ஆண்களுக்கு உயரம் 165 செ.மீ-க்கு குறையாமலும், 50 கிலோ உடல்
எடையுடன் மார்பளவு விரியும் திறன் 89 செ.மீ-க்கு குறையாமலும், பெண்களுக்கு உயரம் 155 செ.மீ-க்கு அதிகமாகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
9) சம்பளம் :
மாதம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10) ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
முதலில் டிஎன்பிஎஸ்சி இணையதளமான, http://www.tnpsc.gov.in/ - என்ற லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.
11) குரூப்-1 தேர்வை எளிதில் வெற்றிபெறுவதற்கான வீடியோவை, https://www.youtube.com/watch?v=iPoV5vIgD_M - என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல் பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_notyfn_Group_I_services.pdf ,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_Gr_I_Addendum.pdf- என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!