[X] Close

பாகிஸ்தானில் முதல்முறையாக நீதிபதியான இந்துப் பெண் !

Pakistan-appoints-first-ever-female-hindu-civil-judge

பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக இந்துப் பெண் ஒருவர் சிவில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கம்பார்-ஷதட்கோட் பகுதியை சேர்ந்தவர் சுமான் குமாரி. இவர் கராச்சியின் ஸாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலை முடித்ததார். இந்நிலையில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, பாகிஸ்தான் நாட்டில் முதல் இந்து பெண் நீதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.


Advertisement

(தந்தையுடன் சுமான் குமாரி)

இதுகுறித்து அவர் கூறும்போது, “ வழக்கறிஞருக்கு படிக்க வேண்டும் என முடிவெடுத்தபோது எங்கள் சமுதாய மக்கள் என் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பயப்பட்டேன். ஆனால் என்ன படிக்க ஆசைப்பட்டேனோ..? அதனை செய்ய என் குடும்பம் துணை நின்றது. தற்போது நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 1.85 சதவீத இந்து மக்கள் உள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் செனட்டிற்கு இந்துப் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டில் இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close