Published : 25,Jan 2019 05:14 PM
தடுக்கி விழுந்த புகைப்படக் கலைஞர்... தூக்கி அணைத்த ராகுல் - வீடியோ

புவனேஸ்வர் விமான நிலையத்தில் தடுக்கி விழுந்த புகைப்படக் கலைஞரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் துரிதமாக காப்பாற்றிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் புவனேஸ்வரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்றைய நிகழ்ச்சியையொட்டி ராகுல் காந்தி தொடர்பாக இரண்டு வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ஒன்று, காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு ராகுல் ரோஜா பூவை கொடுக்கிறார். அந்தக் குழந்தை அழகாக சிரித்துக் கொண்டு அதனை வாங்க மாட்டேன் என்று செல்லமாக அடம்பிடிக்கிறது.
மற்றொன்று, தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் ராகுல் வந்த போது, புகைப்படக் கலைஞர் ஒருவர் எதிர்ப்பாராத விதமாக தடுமாறி கீழே விழச் சென்றார். அப்போது, ராகுல் காந்தி துரிதமாக செயல்பட்டு அந்தப் புகைப்படக் கலைஞரை கை கொடுத்து காப்பாற்றினார். புகைப்படக் கலைஞருக்கு ராகுல் உதவி செய்த புகைப்படமும், வீடியோவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
#WATCH Congress President Rahul Gandhi checks on a photographer who tripped and fell at Bhubaneswar Airport, Odisha. pic.twitter.com/EusYlzlRDn
— ANI (@ANI) January 25, 2019