[X] Close

கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி ! 

Wife-killed-her-husband-in-Erode-for-illegal-relation-with-others

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவர் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் வேலை முடிந்து தன் மனைவி ஹேமலதாவுடன், இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் காட்டூர் என்ற இடத்தில் கைலாசம் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கைலாசத்தை கழுத்தை அறுத்து  கொலை செய்தார். அதில் கைலாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கைலாசத்தின் செல்போனை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி ஹேமலதா மற்றும் அவரது காதலன் ஆனந்துடன் சேர்ந்து கைலாசத்தை கொலை செய்தது தெரியவந்தது. 


Advertisement

இது குறித்து போலிசார் கூறுகையில் “திருச்சியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் புன்னம் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான கைலாசத்தின் மனைவி ஹேமலதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவ்விகாரம் கைலாசத்துக்கு தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் வீட்டைவிட்டு ஐந்து முறை வெளியேறியதால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் வெல்டிங்பட்டறையில் இருந்து வீடுதிரும்பிய கைலாசத்தை கொலை செய்துள்ளார்” எனத் போலிசார் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close