Published : 15,Apr 2017 05:21 AM

தாலியறுக்கும் போராட்டத்தில் விவசாயிகள்

TN-farmers-protest-continue-in-delhi

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் இன்று தாலிகட்டி அறுக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 32 வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான போராட்டத்தை நடத்திவரும் இவர்கள் நேற்று பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.

இன்று தாலி கட்டி பின்னர் அதை அறுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்