சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் சென்று இந்தப் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ரேசன் கடைக்கு சென்று 1000 ரூபாய் பொங்கல் பரிசை குடும்ப அட்டைதாரர்கள் பெற்று சென்றனர். இதனிடையே தமிழக அரசின் இந்தப் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?