[X] Close

சென்னையில் 11 கிலோ தங்கம், 120 கிலோ வெள்ளி கொள்ளை !

Gold-and-Silver-are-Theft-in-Chennai

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே அடகு கடை வியாபாரியின் வீட்டில் 11 கிலோ தங்கம், 120 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ப‌ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் கள்ளச்சாவி போட்டு அடகு கடை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் 120 கிலோ வெள்ளி 1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் சவுகார்பேட்டை பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சந்தோஷ் கடை வேலையை முடித்து விட்டு சாப்பிட வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. 

Image result for gold theft


Advertisement

மேலும் உள்ளறையில் பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம் 140 கிலோ வெள்ளி, 1.5 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. உடனடியாக சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கள்ளச்சாவி போட்டு வீட்டிற்குள் நுழைந்து தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

Image result for gold theft

இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் வண்ணாரப்பேட்டை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close