திருவாருர் இடைத்தேர்தலில் தனித்துத் போட்டியிட இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகியது. ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும், மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14-ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் தீவிரமாக இறங்கியுள்ளன. திருவாரூர் தொகுதி கருணாநிதியின் தொகுதி என்பதால் அங்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. அதேசமயம் ஆளுங்கட்சியாக அதிமுக இருப்பதால், இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியிடம் வெற்றியை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அதிமுக தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆர்கேநகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், தன் பலத்தை நிரூபிக்கும் வகையில் திருவாரூரிலும் செயல்படுவார் எனத் தெரிகிறது. மற்ற கட்சிகளும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா..? வேண்டாமா என்ற நிலைப்பாட்டை வரும் நாட்களில் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் திருவாருர் இடைத்தேர்தலில் தனித்துத் போட்டியிட இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்லை என ஏற்கெனவே கூறியிருப்பதாகவும் சீமான் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர் “ வெள்ள முடியாத படை என்று ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை என்ற ரஷ்ய புரட்சியாளர் லெனின் தெரிவித்துள்ளார். ஆகவே திருவாரூர் யாருடைய கோட்டையும் இல்லை. காசு கொடுக்காமல் இவர்களால் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியுமா..? அப்புறம் என்ன வலிமை வேண்டிக்கிடக்கிறது..? கூட்டணி பலத்தோடு நின்றாலும் காசு கொடுத்து தானே ஜெயிக்கிறார்கள்” என தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!