[X] Close

ராதிகா சரத்குமார் நிறுவனத்திலும் சோதனை

Raid-in-Raadhika-Sarathkumar-Radaan-company

ராதிகா சரத்குமாருக்குச் சொந்தமான ராடான் நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.


Advertisement

ஆர்.கே.நர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையும் ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று நுங்கம்பாத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.


Advertisement

இந்நிலையில் இன்று ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள ராடான் நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


Advertisement

Advertisement
[X] Close