சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்ட நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல புகார்கள் எழுந்ததால், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணைக்காக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆஜரானார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என அக்டோபர் முதல் வாரத்தில் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தபோது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. நினைவு திரும்பியவுடன் வெளிநாடு சென்று சிகிச்சை பெற ஜெயலலிதாவே விரும்பவில்லை. அதன்பின்பு தான் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனக்குத் தெரிந்த விவரங்களை ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிலாக அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உடல்நிலை குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவின. அதேபோல மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். நலமுடன் இருக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டன. ஆனால் அந்த நேரத்தில் புகைப்படங்கள் எதுவும் வெளியாகி இதனை உறுதி செய்யவில்லை.
இதேபோன்ற வதந்திகள் எம்ஜிஆர் உடல் நலம் இல்லாமல் இருந்தபோதும் எழுந்தது. இதனால் அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுவந்த போது அங்கிருந்தபடியே வீடியோ வெளியானது. அதில் எம்ஜிஆர் அருகில் அவரது மனைவி ஜானகியும், மருத்துவர்களும் இருந்தனர். இந்த வீடியோவை தமிழ்நாட்டில் இருந்து பார்த்த மக்கள் நிம்மதியடைந்தனர். எம்ஜிஆர் வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற இங்கே எந்தவித பரப்புரையுமின்றி அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் ஜெயலலிதாவை அதேபோல ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்ற கருத்துகள் எழும்பிய நிலையில், ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் டிடிவி தினகரன் கூட இதே கருத்தை முன்பு கூறியிருந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால்தான் அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துபோக வேண்டிய தேவை ஏற்படவில்லை என அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் முன்பே கூறியிருந்தனர்.
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தெரிவித்தபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஏற்கெனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai