[X] Close

“ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவை விசாரிக்க வேண்டும்” - பொன்னையன்

Former-minister-Ponniyan-said-that-he-should-investigate-Sasikala-over-the-death-of-Jayalalithaa-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவின் உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. 


Advertisement

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார். விசாரணை முடிவடைந்த நிலையில் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரனை செய்ய வேண்டும் எனவும் என்ன ஆதாரம் கொடுத்தேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் தெரிவித்தார்.


Advertisement

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை சரியான பாதையில் செல்கிறது எனவும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன் எனவும் அதை விசாரணை ஆணையம் பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை வைத்தே சந்தேகம் உள்ளதாக பொன்னையன் தெரிவித்துள்ளதாகவும் பல்வேறு கேள்விகளுக்கு பொன்னையன் தெரியாது என்றே பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
 


Advertisement

Advertisement
[X] Close