[X] Close

கூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்

Priya-Prakash-Varrier-most-searched-personality-on-Google-in-2018

2018 ஆம் ஆண்டு கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகை ப்ரியா வாரியர் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். 

ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் ப்ரியா வாரியர் நடித்த மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் ப்ரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் காட்சிகள் வைரலானது. விரல்களில் முத்தமிடும் காட்சிகளும் அதிகம் வைரலானது. அந்த நேரத்தில் ப்ரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக இருந்தார். அதோடு, பாடல் மற்றும் அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், ப்ரியா வாரியர் நீண்ட நாள் பேசு பொருளாக இருந்தார். 

         


Advertisement

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நான்காவது நபராக நடிகை ப்ரியா வாரியர் இருந்துள்ளார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நடிகை மெகன் மார்கில் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் நடன கலைஞர் சப்னா சௌந்திரியும், மூன்றாவது இடத்தில் ப்ரியங்கா சோப்ராவின் காதலன் நிக் ஜோனசும் உள்ளனர். நடிகை சோனம் கபூரின் கணவன் ஆனந்த் அஹுஜா உள்ளார்.

       

பிரபலங்களை தாண்டி பல்வேறு விஷயங்கள் குறித்தும் கூகுள் இந்தியாவில் தேடப்பட்டுள்ளது. அதில், மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?, மீடூ இயக்கம் என்ன?, கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துதல் (what is ball tampering) உள்ளிட்டவை குறித்து தேடியுள்ளனர். அதேபோல், காஷ்மீரின் 377 சட்டப்பிரிவு, சிரியாவில் என்ன நடக்கிறது? கிகி சேலஞ்ச் உள்ளிட்டவை குறித்து தேடியுள்ளனர்.  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close