[X] Close

3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை : தொண்டர்கள் கொண்டாட்டம்!

Celebration-from-outside-Congress-office-in-Delhi

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் அந்தந்த மாநிலங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும். 


Advertisement

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம்என்எப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதையடுத்து அந்தந்த மாநில காங்கிரஸ் அலுவகத்தில் கூடிய தொண்டர்கள், இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திலும் தொண்டர்கள் கூடி வருகின்றனர். அவர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

10.15 மணி நிலவரப்படி இந்த 3 மாநில முன்னிலை விவரம்:

மத்திய பிரதேசம்
மொத்த தொகுதிகள் 230
காங்கிரஸ் முன்னிலை 104
பாஜக முன்னிலை 93
பகுஜ சமாஜ் 6

ராஜஸ்தான்
மொத்த தொகுதிகள் 199
காங்கிரஸ் முன்னிலை 100
பாஜக 76
பகுஜன் சமாஜ் 3

சத்தீஸ்கர்
மொத்த தொகுதிகள் 90
காங்கிரஸ் முன்னிலை  52
பாஜக 25
பகுஜன் சமாஜ் 6

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close