[X] Close

லாரி மீது வேன் மோதல்: பெண்கள் உட்பட 11 பேர் பரிதாப பலி!

11-dead--4-critically-injured-in-Maharashtra-accident

மகாராஷ்ட்ராவில் நடந்த சாலை விபத்தில் பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாயினர்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் சுமார் 15 பேரை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. கோர்பனா பகுதியில் நள்ளிரவு வேன் வந்தபோது எதிரில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 11 பேர் பலியாகி யுள்ளனர். இதில் 4 பேர் [படுகாயமடைந்து உள்ளனர்.  இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Advertisement

தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close