Published : 09,Apr 2017 04:27 AM

மெசேஜூக்கும் தடை: ஆர்.கே.நகரில் நாளை ஓய்கிறது பிரசாரம்

campaign-get-over-by-tomorrow-in-rknagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.

பிரசாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எந்தவொரு விவகாரத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணைய அறிவிக்கைப்படி, குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புக்கும் தடை பொருந்தும். தேர்தல் களப் பணியாற்ற வந்த கட்சி நிர்வாகிகள், வெளியாட்கள் வெளியேற வேண்டும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வாகனங்களை பயன்படுத்த வேட்பாளர்கள் அனுமதிக்கக் கூடாது.

நாளை மாலை 5 மணி முதல் வரும் 12ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்தவோ, கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது. இன்று காலை 7 மணி முதல் வரும் 12ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்