Published : 28,Nov 2018 05:36 AM

'என்னை சிறை வைத்தார், மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்" மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்

Mithali-Raj-hits-out-coach-Ramesh-Pawar-in-the-letter-to-BCCI

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார். இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா. 

இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்க மிதாலிராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், மானேஜர் திருப்தி பட்டாச் சார்யா ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்பட்டது. தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் இருந்து திரும்பியதுமே, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வந்தனர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.

இப்போது இது குறித்து பிசிசிஐ-க்கு எழுத்து பூர்வமாக மிதாலி ராஜ் கொடுத்த கடிதம் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவாரை கடுமையாக குற்றஞச்சாட்டியுள்ளார். அதில் " இந்த நாட்டுக்காக 20 ஆண்டுகாலம் கிரிக்கெட் ஆடியுள்ளேன். ஆனால் முதல்முறையாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது சோர்வடைந்துள்ளேன். அணியில் அதிகாரம் இருப்பவர்களால் என் நம்பிக்கையை உடைக்க பார்க்கிறார்கள். இப்போது எனக்கு முதல் முறையாக ஒரு எண்ணம் தோன்றுகிறது. இப்படியொரு நேரத்தில் இந்நாட்டுக்கான எனது சேவை மதிப்புடையதா ?" என அந்தக் கடித்தில் மிதாலி ராஜ் வினவியுள்ளார். 

மேலும் அந்தக் கடிதத்தில் தனக்கு கேப்டன் ஹர்மண்ப்ரீத் கவுர் மீது எந்தக் கோபமும் இல்லை என்றும் ரமேஷ் பவாரின் முடிவை அவரும் ஏற்றுக்கொண்டதுதான் தனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தனக்கு மன உளைச்சல் கொடுத்ததாக கூறியுள்ளார் இது குறித்து " நான் பயிற்சியில் ஈடுபட்டால் அங்கே இருந்து விலகி செல்வது, பேச வந்தால் போனை பார்த்துக் கொண்டே விலகுவது, என இருந்தார் ரமேஷ். இது எல்லை மீறி செல்வதை கண்ட நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனாலும் ரமேஷின் பாரபட்சம் தொடர்ந்தது. அயர்லாந்து போட்டியில் எனக்கு சிறிய காயம் ஏற்பட ஒரு நாள் ஓய்வில் இருந்துள்ளார். அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு மிதாலி தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என சொல்லிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பங்கேற்க முடியாமல் செய்துவிட்டார். பின்பு போட்டியில் வெற்றிப் பெற்ற பின்பு இப்போது வேண்டுமானால் மிதாலியை அறையில் இருந்து வெளியே வரச் சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் மிதாலி "இந்தத் சதித்திட்டம் எனக்கு தெரியாமல் போய்விட்டது. என்னை ரமேஷ் பவார் சிறை வைத்து ஆடவிடாமல் செய்துவிட்டார். அதேபோல இங்கிலாந்து அணியுடனான போட்டியிலும் என்னை சேர்க்கவில்லை. இந்த விஷயத்தை என்னை தவிர அனைவரிடமும் சொன்னார் ரமேஷ் பவார். அவரால்தான் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைந்தது" என வருத்தத்த்தடுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் பயிற்சியாளர் ரமேஷ் பவாரை மட்டும் குற்றஞ்சாட்டியுள்ளார், அதில் "டி20 தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றதில் இருந்து ரமேஷ் போவார் தன்னை ஓரங்கட்ட முயற்சி செய்ததார். எப்போதும் துவக்கத்தில் களம் இறங்கும் என்னை மிடில் ஆர்டரில் இறங்குமாறு கூறினார். அதன்படி இறங்கினேன். ஆனால் நியூசிலாந்து போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த போட்டியிலும் மிடில் ஆர்டரில் களம் இறங்குமாறு ரமேஷ் கூறினார் ஆனால் தேர்வாளர்களிடம் பேசி தொடக்க வீரராக இறங்கினேன்" என கூறியுள்ளார். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்