Published : 20,Nov 2018 09:08 AM

கஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி

Rajinikanth-donates-Rs-50-lakhs-worth-commodities-to-affected-areas

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளார்

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக  நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ஆகியோரும் பொருளாகவும், ரொக்கமாகவும் உதவி அளித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் , ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் நிவாரண நிதியாக ரூ50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளார். நிவாரண பொருட்களை தனது மக்கள் மன்றத்தின் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாளை அனுப்பப்படும். நிவாரணப் பொருட்களை ரஜினி மன்ற நிர்வாகிகள் மூலமாக பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்