Published : 16,Nov 2018 10:32 AM

புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் ஸ்டாலின்

dmk-leader-Stalin-will-see-gaja-cyclone-affected-areas-tomorrow

‘கஜா’ புயலையொட்டி தமிழ்‌நாடு பேரிடர் மேலாண்‌மை வாரியம்‌ மேற்கொண்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஸ்டாலின், நாளை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

‘கஜா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணயத்தில் புயல் பாதிப்புக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். ‘கஜா’ புயல் எதிரொலி காரணமாக திருச்சி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல், ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

         

‘கஜா’ புயலின் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்‌ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்‌ள திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக தலா 17 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது. அடுத்தப்படியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி,‌ மற்றும் பட்டுக்கோட்டையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 14 சென்டி மீட்டரும், விருத்தாசலம் மற்றும் காஞ்சிபு‌ரம் மாவட்டம் செங்கல்பட்டில் தலா 12‌சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

         

இந்நிலையில், ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு உதவுமாறு திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, ‘கஜா’ புயலில் விரைந்து செயல்பட்ட தமிழ்‌நாடு பேரிடர் மேலாண்‌மை வாரியத்தின் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டி இருந்தார். தமிழக அரசை பாராட்டிய ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஸ்டாலின் பாராட்டினை வரவேற்றுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்