Published : 05,Apr 2017 04:54 PM
ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 14 ரன்களில் வெளியேறினார். ஷிகர் தவான் 40 ரன்களும் ஹென்ரிகஸ் 52 ரன்களும் விளாசினார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசிய யுவராஜ் சிங் 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.