[X] Close

சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல்... பலத்த பாதுகாப்பு

1st-Phase-in-Election-in-Chattisgarh-today--Security-tightened

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை என சுமார் 65 ஆயிரம் வீரர்களும், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களை ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக வரும் வீரர்களை கொல்ல, நக்சல்கள் சாலையில் கண்ணி வெடிகளை புதைத்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லையொட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படியும் காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முதல் கட்டத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், அடுத்த எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close