[X] Close

விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு : ரசிகர்கள் கொண்டாட்டம் ! 

Ajith-Film-Viswasam-is-completes-their-Shooting

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும்  ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Advertisement

அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும் விஸ்வாசம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புககு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் பார்த்துக்கொண்டார்கள். விஸ்வாசம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு செய்தியை தேடிப்பிடித்து பரபரப்பாக்கி வந்தனர். இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.


Advertisement

இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.முதலில் இளம் அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர், பின்பு அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக கூறப்பட்டது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கப்பட்டது.

இதனையடுத்து அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. பிறகு நயன்தாரா பகுதியும் காட்சியாக்கப்பட்டன.இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக இப்படத்தின் தாயரிப்பு நிறுவனம் ட்விட்டரில் இன்று தெரிவித்துள்ளது. நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close