Published : 05,Apr 2017 10:59 AM
என்னவாகும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி?

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கும் நடைமுறை குறித்து கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் பி.சி. கோஷ், அமிதவாராய் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவை கீழ் நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்ததை உறுதி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் குறித்து இறுதி முடிவை அறிவிக்காமல், அவர் இறந்ததைக் குறிப்பிட்டு முடித்து வைத்து விட்டதை கர்நாடக அரசு சுட்டிக்காட்டியது.
இதுகுறித்து ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி நிராகரித்தனர். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அபராதம் வசூலிப்பதில் கர்நாடக அரசுக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.