Published : 02,Apr 2017 12:29 PM

இந்தியாவின் நீளமான சுரங்கச் சாலையில் பயணித்த பிரதமர் மோடி

PM-Modi-inaugurates-Chenani-Nashri-tunnel-in-J-K

காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சுரங்கச் சாலையை திறந்து வைத்த பிரதமர் அதன் முழு தூரமும் பயணித்து பிறகு அதே பாதையில் திரும்ப வந்தார். ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 9.2 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கச் சாலை மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான பயண தூரமும் பய‌ண நேரமும் கணிசமாக குறையும்.

பிரதமர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில் பிரதமரின் காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பிரிவினைவாத இயக்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனையடுத்து தலைநகர் ஸ்ரீநகரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்