பேட்ட படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தும் இயக்குநர் மகேந்திரனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டேராடூன், டார்ஜிலிங், மதுரை, சென்னை என பல இடங்களிலும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பேட்ட திரைப்படத்தில் ரஜினியின் இரு மாதிரியான ஃபர்ஸ்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன. இந்த லுக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. மேலும் பேட்ட படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து அவ்வப்போது வைரலானது.
இந்நிலையில் படத்தில் இயக்குநர் மகேந்திரனும் இணைவதாக தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் ரஜினியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் மகேந்திரன் பகிர்ந்துள்ளார்.
மீண்டும் ரஜினியுடன் மகேந்திரன் இணைந்திருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் மகேந்திரன் 1980-களில் ரஜினியை வைத்து "முள்ளும் மலரும்", ஜானி போன்ற படங்களை இயக்கியவர்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்