[X] Close

வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் ? - சின்மயி பதில்

Chinmayi-Explained-Why-Invite-Vairamuthu-to-her-Marriage

வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என பாடகி சின்மயி பதிலளித்துள்ளார்.


Advertisement

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு ட்விட்டரில் மறைமுக பதில் கூறிய வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” எனக் தெரிவித்தார். வைரமுத்துவின் ட்விட்டை குறிப்பிட்டு, அவர் ஒரு ‘பொய்யர்’ என சின்மயி பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, சின்மயி வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. சின்மயி திருமணத்தில் வைரமுத்து கலந்து கொண்ட படத்தையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சின்மயி, “வைரமுத்துவை எனது திருமணத்திற்கு நாங்கள் அழைத்தது ஏன்?. ஏனென்றால் அப்போது நான் ராகுலிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அதைப்பற்றி சொல்லவில்லை. அதன்பின்னர் தான் நான் கூறினேன். ஆனால் அவர்கள் என்மீது வைத்திருந்த அன்பு துளி கூட குறையவில்லை. நான் அவரை திருமணத்திற்கு அழைத்தேன். ஏனென்றால் நான் அனைத்து திரைத்துறை நிபுணர்களையும் அழைத்திருந்தேன். அவரை மட்டும் நான் அழைக்கவில்லை, அவரது குடும்பத்தையும் தான் அழைத்திருந்தேன். அப்படி இருக்கையில் நான் ஏன் விளக்கமளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close