Published : 01,Apr 2017 09:47 AM

ஒரு நாள் நடிக்க ரூ.5 கோடியாம்! ஷாக் கொடுக்கிறார் விராட்

virat-earns-per-lakh-for-a-days-shoot

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அமீர்கானை விட அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

அதிக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாரூக் கான் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். அதை முறியடித்திருக்கிறார் விராட் கோலி. 28 வயதான கோலி இனிவரும் ஒப்பந்தங்களில் நடிக்க, நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு 643 முறை விராட் கோலியின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வெளிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் அதிகம் பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான், ஷாரூக் கான், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரை விட, இந்தியாவில் அதிகமானோரால் விரும்பப்படும் நபராக, விராட் கோலி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்