[X] Close

“எங்கள் தொண்டனை தொட்டுப்பாருங்கள்?!” - ஸ்டாலினை சரமாரியாக தாக்கிய முதல்வர்

CM-Palanisamy-Condemned-to-MK-Stalin-and-Congress

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் திமுக-காங்கிரஸ்தான் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக-காங்கிரஸை கண்டித்து சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “அதிமுக ஜனநாயகக்கட்சி. இங்கு உழைத்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும். நாங்கள் உழைத்து அமைச்சர்கள் ஆகிறோம். உங்களுக்கு ஏன் பொறாமை?. நாங்கள் உழைக்கப் பிறந்தவர்கள். உங்களைப்போல மற்றவர்களின் உழைப்பில் வாழப்பிறந்தவர்கள் அல்ல. ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் என்னை பேடி என்று கூறியுள்ளார். நானா பேடி? ஒரே தொகுதியில் 9 முறை நின்றுயிருக்கிறேன். உங்களைப் போல குடும்பத்திற்கு சொத்து சேர்க்க நாங்கள் வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக அமைச்சர்களாகியுள்ளோம். உங்களைப்போல பதவி வெறிபிடித்து அழையும் மனிதர்கள் நாங்கள் அல்ல. ஸ்டாலின் அடிக்கடி லண்டன் போய்க்கொண்டு இருக்கிறார். எதற்கு லண்டன் போகிறார் என்றே தெரியவில்லை. 

நீங்கள் வந்த விதம் வேறு, நான் வந்த விதம் வேறு. உங்க அப்பா முதலமைச்சராக இருந்ததால், நீங்கள் எம்எல்ஏ ஆகிவிட்டீர்கள். நான் அப்படியல்ல; கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து, இந்த நிலையை அடைந்துள்ளேன். எங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும். அதேபோன்று உங்கப்பா கருணாநிதி போர்வையில் நீங்கள் செயல்தலைவர் ஆனீர்கள். அதே வழியில் தற்போது திமுக தலைவர் ஆகியுள்ளீர்கள். ஆனால் நான் அப்படியல்ல; கிளைச்செயலாளர், மாவட்டச்செயலாளர், தலைமைப் பொறுப்பு என படிபடியாய் வளர்ந்து வந்துள்ளேன். அதனால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. எனக்கு அல்ல; அதிமுகவின் அடிமட்ட தொண்டர் கூட உங்களைப்பார்த்து பயப்படமாட்டார். எங்கள் தொண்டனை தொட்டுப்பாருங்கள், என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்யத் தவறிவிடுவோமோ என்றுதான் பயப்படுவோம். நீங்கள் அதிமுகவை உடைக்க நினைத்தீர்கள் முடிந்ததா? ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா? முடியாது. ஏனென்றால் அதிமுகவை உருவாக்கிய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்” என்று ஆவேசமாக பேசினார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close