[X] Close

உ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு

Fever-in-uttar-pradesh--71-children-dead

உத்தரப்பிரதேசத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் கடந்த 45 நாட்களில் 71-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாராய்ச் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோயால் 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 45 நாட்களில் மட்டும் 71-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்தக் காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் 200 படுக்கைகள் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற போதிய இடவசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close