[X] Close

விராத் கோலி இல்லைனா என்னங்க? கேட்கிறார் கங்குலி!

Virat-Kohli-s-Absence-Won-t-Be-A-Factor--Says-Sourav-Ganguly

விராத் கோலி அணியில் இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதிப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இலங்கையை, பங்களாதேஷ் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், ஹாங்காங்கை வென்றது. மூன்றாவது போட்டியில் இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் தோற்று தொடரில் இருந்து இலங்கை அணி பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று நான்காவது போட்டி நடக்கிறது. இதில், இந்தியா -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை அடுத்து, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்கிறது. 


இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் ஃபைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி. அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில்தான் மோதுகின்றன. அதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
 
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான இந்த தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு அளித்திருக்கக் கூடாது என்றும் கொடுத்திருக் கலாம் என்று விவாதங்கள் தூள் பறக்கின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, ’விராத் கோலி அணியில் இல்லாதது பாதிப்பில்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறப்பானதுதான். இந்த போட்டியில் வெல்வதற்கு இரண்டு அணிக்கும் சரிசமமான வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close