Published : 30,Mar 2017 07:15 AM

விஜயகாந்த் அநேகமாக பரப்புரைக்கு வருவார்: பிரேமலதா

Premalatha-talks-about-vijayakanth-health-conditions

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அநேகமாக பரப்புரைக்கு வருவார் என தேமுதிக-வின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னையில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் உள்ளார். தற்போது மிக மிக நலமுடன் இருக்கிறார். அநேகமாக ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரைக்கு அநேகமாக அவர் வருவார். நான் 5 நாட்கள் ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன் என கூறினார்

நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகள் மிக கஷ்டப்பட்டு டெல்லியில் இத்தனை நாட்களாக போராடி வருகின்றனர். நதிகள் இணைப்பே விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அதேபோல் மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றார்.

மற்ற கட்சிகள் எல்லாமே பணத்தை நம்பியுள்ளன. ஆனால் தேமுதிக-வோ மக்களை நம்பியிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாகவும் பிரேமலதா கூறினார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என்ற அவர், மக்கள் புது தலைவர்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்