தன்பால் ஈர்ப்பு குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடெங்கிலும் உள்ள எல்.ஜி.பி.டி குடும்பத்தினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.
தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தன்பாலின ஈர்ப்பை குற்றம் என அறிவிக்கும் சட்டப்பிரிவு 377க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இத்தனை ஆண்டுகளாக சுமத்தப்பட்ட களங்கத்திற்கு நமது சமூகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Read Also -> கலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு !
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று நாடெங்கிலும் உள்ள தன்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவர்கள், ஆடல் பாடலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள லலித் ஹோட்டலில் தன்பால் ஈர்ப்பாளர்கள், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும் உற்சாகமாக நடனமாடினர். பல்வேறு நகரங்களிலும் கூடிய இவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்தத் தீர்ப்பு மூலம் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!