Published : 28,Mar 2017 02:48 AM

டெல்லியில் பாம்புக்கறி திண்ணும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

TN-Farmers-protest-continue-In-Delhi

டெல்லியில் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 15-ஆவது நாளாக இன்றும் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு மற்ற மாநில விவசாயிகளும் நேரில் சென்று தங்களது ஆதரவினை பதிவு செய்துள்ளனர்.

இதுநாள் வரை மண்டை ஓட்டை வைத்து போராட்டம். எலிக்கறி திண்ணும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் தங்களது கோரிக்கையை மத்திய அரசோ, மாநில அரசோ கண்டுகொள்ளவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தியும், சாலையில் உருண்டு புரண்டும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்