[X] Close

டெல்லியில் தொடரும் வி‌வசாயிகள் போராட்டம்

Tamilnadu-Farmers-Protest-Continues-in-Delhi

டெல்லி ஜந்தர் மந்தரில்‌ தமி‌ழ‌‌க வி‌வசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.


Advertisement

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாயிகள் சாலையில் சடலம் போல் படுத்துகிடந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் வெற்றியுடன் தமிழகம் திரும்புவோம் என்றும் விவசாயிகள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close