[X] Close

அரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது

Erode-Government-Job-Forgery---A-person-Arrested

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்தவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் வசிப்பவர் சாந்தா. இவர் கிராம நிர்வாக அலுவலர் பணிக்காக முயற்சி செய்திருந்திருக்கிறார். அவரிடம் கரூரைச் சேர்ந்த செந்தில்குமார், மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு செந்தில்குமாரிடம் சாந்தா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். 


Advertisement

ஆனால் செந்தில்குமார் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் இருந்ததால், சாந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில், செந்தில்குமாரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் பலபேரிடம் இதுபோன்று பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close