ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகளில் சியர் லீடர்களுக்குப் பதிலாக, ராமரின் புகழ்பாடும் பாடல்களை இசைக்கச் செய்யலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்களிக்கப் போவதில்லை என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளதை சுட்டிக் காட்டினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்காமல் இருப்பதற்கு அப்படி என்ன பிரச்னை இருந்துவிட முடியும்? என கூறினார்.
ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சியர் லீடர்கள் தேவையில்லை என்று சவுகான் கருத்து கூறியிருப்பதால், வீரர்கள் மைதானத்தில் சிக்சரோ, பவுண்டரியோ அடிக்கும்போது, சியர்லீடர்களுக்கு பதிலாக ராமரின் பாடல்களை இசைக்கலாம் என்றும் திக் விஜய் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்