Published : 24,Mar 2017 11:10 AM

லாரி ஹாரன் அடித்து மகிழ்ந்த ட்ரம்ப்

TRUMP-TOOTING-HORN-OF-SEMI-TRUCK

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் அமர்ந்து ஒலிப்பானை ஒலித்து மகிழ்ந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்‌. ஒபாமா மருத்துவக் காப்பீடு திட்டம் திரும்பப் பெறப்பட்டதால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஓட்டுநர்களின் லாரி வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. இதில் ஏறி சில நிமிட‌ங்கள் வரை ட்ரம்ப் அமர்ந்தார். பின்னர் வாகனத்தில் இருந்த ஒலிப்பானை அழுத்தி மகிழ்ந்தார். இதனையடுத்த‌ லாரி ஓட்டுனர்கள், நிறுவனத் தலைவர்களுடன் ட்ரம்ப் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்