[X] Close

ரோகித் சர்மாவின் செஞ்சுரியும்..முறியடிக்கப்பட்ட சாதனைகளும்

Rohit-Sharma-Breaks-Several-Records-During-Third-T20I-Against-England

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசியதை அடுத்து, ரோகித் சர்மா புதிய சாதனை பல படைத்துள்ளார்.


Advertisement

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பறித்துக்கொடுத்தார். 

சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் புதிய சாதனைகள்:


Advertisement
  • சர்வதேச டி20 போட்டியில் மூன்று சதம் அடித்த முதல் இந்திய வீரர். சர்வதேச அளவில் நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ உடன் இந்தச் சாதனையை பகிர்ந்து கொள்கிறார்.
  • விராட் கோலிக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர்
  • டி20 கிரிக்கெட்ப் போட்டிகளில் மொத்தம் 5 சதம் அடித்த ஆசிய வீரர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் 21 சதங்கள் அடித்துள்ளார்.
  • ரோகித் சர்மா மட்டும்தான் மூன்று விதமான போட்டிகளில் 3 சதங்கள் அடித்தவர். கெயில் சர்வதேச டி20 போட்டியில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். முண்ரோ டி20 கிரிக்கெட்டில் மட்டுமே 3 சதம் அடித்துள்ளார். 

மற்ற வீரர்கள், இந்திய அணியின் சாதனைகள்:

  • டி20 கிரிக்கெட்டில் 5 கேட்சுகள் பிடித்த முதல் வீரர்
  • 4 விக்கெட்டுகள் மற்றும் 25 ரன்னுக்கும் மேலாக எடுத்த முதல் இந்திய வீரர்
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான மிகப்பெரிய சேஸ் இது தான்
  • இங்கிலாந்தில் விளையாடி போட்டிகளில் மிகப்பெரிய சேஸ்
  • இந்திய அணி இதுவரை 3 டி20 போட்டிகள் கொண்ட 8 தொடர்களை விளையாடி, அனைத்தையும் வென்றுள்ளது.
  • இந்திய அணி தொடர்ச்சியா 6 டி20 தொடர்களை வென்றுள்ளது. பாகிஸ்தான் 9 தொடர்களை வென்று முன்னிலை உள்ளது.
  • டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 மற்றும் அதற்கு ரன்களுக்கு மேல் இதுவரை 4 முறை சேஸ் செய்துள்ளது. மற்ற அணிகள் இரண்டு முறையே சேஸ் செய்துள்ளது.

                         


Advertisement

Advertisement

Advertisement
[X] Close