நீலகிரி மாவட்டம் குன்னூரில் நண்பனின் தலைமுடியை வெட்டுவதை தடுத்த பள்ளி மாணவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சின்னகரும்பாலம் பகுதியைச் சேர்ந்த சங்ரித், தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். மாலையில் பள்ளி முடிந்து பேருந்து நிறுத்தத்தில் சங்ரித் மற்றும் அவரது நண்பர்கள் நின்றிருந்ததாக தெரிகிறது. அப்போது, சங்ரித் நண்பர்களின் தலைமுடியை இறைச்சிக்கடையில் வேலை செய்யும் 16 வயது சிறுவன் வெட்ட முயன்றதாக தெரிகிறது. இதனை சங்ரித் தடுக்கவே அவருக்கும் அச்சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியுள்ளது.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்ரித்தின் வலதுகையை அச்சிறுவன் வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சங்கிரித்தை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவரை தாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்