இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய நீதிபதி, கேரளாவில் அதிவேகத்தில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர், கேரளா தற்போதைய நீதிபதி ஆகியோரின் வாகனங்கள் ரேடார் மூலம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளது. அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் சட்டத்தை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இருசக்கர வாகனங்கள் எதிரில் வருபவர்களுக்கு இடையூறாக ஒளி எழுப்பும் ஹை பீம் (high beam) விளக்குகளை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த பரிந்துரைகளை நிறைவேற்றியது குறித்தோ அல்லது நிறைவேற்ற திட்டமிட்டது குறித்தோ ஜூலை 27-ம் தேதி டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!